என்ன ஒரு படம்! இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவிட்டார் ராஜமெளலி: ஷங்கர்
திங்கள், 1 மே 2017 (08:29 IST)
தென்னிந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் முக்கியமானவர்கள் ஷங்கர் மற்றும் ராஜமெளலி. இருவருமே 'எந்திரன் 2' என்ற '2.0' மற்றும் பாகுபலி 2' ஆகிய படங்களை ஒரே நாளில் பூஜை போட்டு தொடங்கினர். இரண்டு படங்களுமெ அவரவர்களின் இரண்டாம் பாகம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ராஜமெளலி தனது 'பாகுபலி 2' படத்தை கடந்த வெள்ளியன்று ரிலீஸ் செய்துவிட்டார் ஆனால் ஷங்கர் தனது படத்தை கிட்டத்தட்ட இன்னும் ஒரு வருடம் கழித்தே ரிலீஸ் செய்யவுள்ளார்
இந்நிலையில் ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தை ஷங்கர் நேற்று பார்த்து தனது டுவிட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் வகையிலான படம் என்றும், இந்த படத்தின் வீரமான, துணிச்சலான, அழகான, காட்சிகள் மற்றும் இசை மிக மிக அருமை என்றும், ராஜமெளலியின் டீம் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்' என்றும் கூறியுள்ளார். இதற்கு ராஜமெளலி நன்றி தெரிவித்துள்ளார்
ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் ஓப்பனிங் மற்றும் மொத்த வசூல் சாதனையை முறியடிக்க '2.0' படத்தால் மட்டுமே முடியும் என்று கூறப்படும் நிலையில் ஒருவருக்கொருவர் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.