முதலில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த செல்வேந்திரன், பின்னர் இயக்குனர் ஷங்கரிடம் காதலன், இந்தியன் மற்றும் ஜீன்ஸ் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் இவர் ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்விப் படமாக அமைந்த நிலையில் அவருக்கு அதன் பின்னர் படம் இயக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் பொருளாதார ரீதியாக நலிந்த நிலைக்கு சென்ற செல்வேந்திரன், தற்போது மிகவும் மோசமான நிலைக்கு ஆளாகி பிச்சை எடுத்து வாழ்க்கையைக் கடத்தி வருகிறார். அவர் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி நெஞ்சை உருக வைத்துள்ளன.