இப்போ தான் லட்சணமா இருக்குற... கல்யாண கோலத்தில் கவர்ச்சி நடிகை!

செவ்வாய், 27 அக்டோபர் 2020 (14:37 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருவார்.

ஆனால், தற்ப்போது வழக்கத்திற்கு மாறாக பட்டுப்புடவை, கழுத்து நிறைய நகைகள் அணிந்துக்கொண்டு மணப்பெண் அலங்காரத்தில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த போட்டோக்கள் இணையவாசிகள் கையில் சிக்க " இப்போ தான் பொண்ணா அடக்கம் ஒடுக்கமா இருக்குற" என கமெண்ட் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்