இந்நிலையில் ஷாலினி-சங்கீதா நட்பை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அஜித்தின் மனைவியான ஷாலினி, விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு உணவு பரிமாறுவது போன்ற காட்சி ஒன்று உள்ளது. இந்த புகைப்படம் எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் அஜித், விஜய் ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டரில் சண்டை போடாமல் போட்டி போட்டு கொண்டு ஷேர் செய்து வருகின்றனர்.