ஷகீலா டிரெய்லர் ரிலீஸ்... டிவிட்டரில் டிரெண்ட்!!

புதன், 16 டிசம்பர் 2020 (14:45 IST)
நடிகை ஷகீலாவின் பயோபிக் பாலிவுட்டில் ஷகீலா என்ற பெயரிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 
 
பி கிரேட் படங்களின் மூலம் பிரபலமான நடிகை ஷகீலா. ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த படங்களில் இருந்து விலகி நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். 
 
தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஷகீலா என்ற பெயரிலேயே பாலிவுட்டில் படமாக்கியுள்ளனர். இதில் ஷகீலாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா தத்தா நடித்துள்ளார். இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது. 
 
தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் Shakeela Trailer என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதோ இந்த டிரெய்லர்... 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்