பாலிவுட் பிரபலங்கள் பலர் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பர். அதில் முக்கியமாக ஷாருக்கானை கூறலாம். ஏனென்றால் சினிமாவை போன்றே தொழிலிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் நடிகர் ஷாருகான். சினிமா, விளம்பர படங்கள், தொழில் என அனைத்திலும் நாளொன்றுக்கு பல ஆயிரம் கோடி வருமானத்தை பெறுகிறார் ஷாருகான்.
ஷாருக்கான் மும்பையில் மன்னாட் என்ற பகுதியில் கட்டியிருக்கும் மாளிகை வீட்டின் மேல் பலருக்கு ஆசை இருக்கிறது. அந்த வீடு பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய ஷாருக்கான், நான் திருமணமாகி மும்பை வந்தபோது சின்ன வீட்டில் இருந்தேன்.அந்த சமயத்தில் டெல்லி வாசிகள் பங்களாவில் இருப்பதை விரும்புவார்கள், அப்படி நான் யோசித்து வாங்கிய வீடு அது, அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 200 கோடி என கூறியுள்ளார்.