மீண்டும் ரஜினிக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி… தலைவர் 171 லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth

வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியான தி பர்ஜ் என்ற படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இந்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் ஷூட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு ப்ரமோஷன் வீடியோவோடு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஷூட்டிங் நேற்று முன் தினம் சென்னையில் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிகர் மோகன் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது விஜய் சேதுபதிதான் அந்த  வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக பேட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். அதே போல லோகேஷ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்