கார் விபத்தில் சின்னத்திரை சீரியல் நடிகை மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Mahendran

திங்கள், 13 மே 2024 (13:10 IST)
ஆந்திராவில் நடந்த கார் விபத்தில் சின்னத்திரை சீரியல் நடிகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்தவர் பவித்ரா ஜெயராம். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி என்ற தொடரின் தெலுங்கு டப்பிங் தொடரில் நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில் பவித்ரா ஜெயராம் நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த பேருந்தின் மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சின்னத்திரை உலகினர் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்