திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு.. 5 பேருக்கு படுகாயம்..!

Siva

சனி, 11 மே 2024 (11:47 IST)
திட்டக்குடி அருகே வேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென டயர் வெடித்ததால் நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஐந்து பேருக்கு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 தஞ்சையிலிருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சேரிக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது திட்டக்குடி அருகே அவர்கள் சென்ற கார் டயர் திடீரென வெடித்ததால் கார் நிலைகுலைந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பின் சிறுமி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காயமடைந்த ஐந்து பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதும் கார் டயர் வெடித்ததற்கு என்ன காரணம் என்று விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்