மறைந்த நடிகையின் கடைசி திரைப்படத்தை வாங்கிய பிரபல டிவி!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (12:58 IST)
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் நடன நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பெரும் புகழ் பெற்ற சித்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இல்லத்தரசிகள் அவர் மீது அளவுக்கடந்த பாசத்தை வைத்து ரசிகையாக கொண்டாடினர். 
 
இதையடுத்து சித்ரா ஹேமந்த் என்ற தொழிலதிபரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக சித்ரா  ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவர் இறப்பதற்கு முன்னர் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்