தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணியோடு இணைந்து பல படங்களில் நகைச்சுவை சாம்ராஜ்யம் செய்தவர் நடிகர் செந்தில். திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் அவர் அதிமுகவில் இணைந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது அமமுகவில் இணைந்தார்.