களமிறங்கிய ஆஸி அணியின் பேட்டிங்கை ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களான பூம்ரா மற்று அஸ்வின் ஆகிய இருவரும் கட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் தேனீர் இடைவேளை வரை ஆஸி 135 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் தனது அறிமுகப்போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
தேநீர் இடைவெளிக்குப் பிறகு இந்திய பவுலர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. சிறப்பாக வீசிய பூம்ரா மற்றும் அஸ்வின் மேலும் விக்கெட்களைக் குவிக்க ஆஸி, 195 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆனது. இந்திய தரப்பில் பூம்ரா 4 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆஸி தரப்பில் மார்னஸ் லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.