ஜாக்கி சானுடன் இருக்கும் தமிழ் சீரியல் நடிகர்… இணையத்தில் பரவிய புகைப்படம்!

செவ்வாய், 1 ஜூன் 2021 (16:14 IST)
சீரியல் நடிகர் கார்த்தி ஜாக்கி சானுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல கவனம் பெற்ற மெகா தொடர் செம்பருத்தி. இதில் நடித்த கார்த்திக்குக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதே போல அவர் நடித்த ஆபிஸ் சீரியலும் நல்ல கவனம் பெற்றது. இந்நிலையில் அவர் திடீரென்று அந்த செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஆளே அட்ரஸ் இல்லாமல் கொஞ்ச நாள் இருந்த நிலையில் இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் பிரபல ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்