திரௌபதி இயக்குனரின் பகாசூரன்… நடிகர் நட்டியின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

சனி, 27 ஆகஸ்ட் 2022 (16:01 IST)
பகாசூரன் திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்க முன்னணி நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு பகாசூரன் என்று அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து படத்தில் செல்வராகவனின் கதாபாத்திர லுக் போஸ்டரை சமீபத்தில் இயக்குனர் வெளியிட்டு இருந்தார். அதையடுத்து இப்போது முக்கிய வேடத்தில் நடிக்கும் நட்டி நட்ராஜின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்