தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வந்த நிலையில் தற்போது ரிலீஸ் பற்றிய அப்டேட்டை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ள அவர் “விரைவில் திரையில்” என்ற அப்டேட்டையும் கொடுத்துள்ளார். வெளியாகியுள்ள போஸ்டர்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்நிலையில் படத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே தேதியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் முதல் பாகமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.