செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே’ . இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. புதிய ரிலீஸ் தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த செல்வராகவன், ட்விட்டரில் தனது ஆதங்கத்தை கொட்டி உள்ளார். அதில், 'நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அதனை அமைதியாக செய்து வருகிறோம். சரியான நேரத்தில் அப்டேட் வரும். ஒவ்வொரு 3நாளிலோ, ஒரு வாரத்திலோ அப்டேட் வராது. ரசிகர்களாக நீங்கள் தான் எங்கள் பலம். உங்களுடைய ஆதரவு மூலம் கடுமையாக உழைத்து விரைவில் படத்தை முடிப்போம்' என்றார்.