செல்வராகவனின் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வருகிறதா?.. 90ஸ் கிட்ஸ்களுக்கு செம்ம நியூஸ்

வியாழன், 26 ஜனவரி 2023 (08:38 IST)
நடிகை சோனியா அகர்வால் மற்றும் ரவி கிருஷ்ணா ஆகியோர் நடித்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார்.

7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் செல்வராகவன் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவரின் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கும் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்