செல்வராகவனின் மனைவி இந்த நடிகையின் சகோதரி - அட ஆமா... முக ஜாடை அப்படியே இருக்கு!

வியாழன், 11 ஜூன் 2020 (18:29 IST)
சினிமாவை நேசிக்கும் வெற்றி இயக்குனராக செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி , யாரடி நீ மோகினி , மயக்கம் என்ன உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

தன்னை 7G ரெயின்போ காலனி படத்தின் மூலம்  திரையுலகில் அறிமுகப்படுத்திய செல்வராகவனை சோனியா அகர்வால் காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும்  ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதையடுத்து செல்வராகவன் கீதாஞ்சலி என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார்.  கீதாஞ்சலி, செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


இவர்களுக்கு லீலாவதி என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் கீதாஞ்சலி பிரபல காமெடி நடிகை  வித்யூ லேகா ராமனின்  சகோதரி என்பது தெரியவந்துள்ளது. நடிகை வித்யூ லேகாவின் தந்தையும் நடிகருமான மோகன் லேகா அவர்களின் சகோதரர் பி எஸ் ராமனின் மகள் தான் செல்வராகவனின் மனைவியான கீதாஞ்சலி ராமன்.  இந்த விஷயம் இதுவரை தெரிந்திராத பலரும் அட ஆமாம்பா... முக ஜாடை கூட அப்படியே இருக்கு என ஷாக்காகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்