சீனு ராமசாமி தென்மேற்குப் பருவக்காற்று படத்தை எடுத்த போது, பாலுமகேந்திராவின் மனைவி அந்தப் படத்தை பார்க்கும்படி பாலாவிடம் சொல்லியிருக்கிறார். காரணம், பாலுமகேந்திராவிடம் பாலா அசிஸ்டெண்டாக இருந்த போது சீனு ராமசாமி பாலாவின் ஜுனியர்.
இந்த சம்பவத்தை பேச்சில் குறிப்பிட்ட பாலா, அதுவரைக்கும் நான் சீனுவை முட்டாள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த படத்தை பார்த்த பிறகு கிட்டத்தட்ட ஒரு வாரம் என்னால் தூங்க முடியவில்லை. படம் சம்பந்தப்பட்ட அனைவரிடம் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தேன் என்றார்.
தர்மதுரை படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர்.