ஜி வி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த அந்த படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். அதில் “அன்பானவர்களுக்கு வணக்கம், உங்கள் ஆதரவு வேண்டி எனது இயக்கத்தில் 9வது திரைப்படமாக விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்திருக்கும் கோழிப்பண்ணை செல்லதுரை செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது.” என அறிவித்துள்ளார்.