பழைய பாடலைப் படத்தில் பயன்படுத்த இவ்வளவு லட்சமா?... இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்!

vinoth

புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:00 IST)
தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, தற்போது புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் ‘கோழிப்பன்னை செல்லதுரை’  என்ற படத்தை இயக்கிமுடித்துல்ளார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. செப்டம்பர் 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் சில இடங்களில் பழைய பாடல் ஒன்றைப் பயன்படுத்த விரும்பியதாக, அதற்காக பாடல் உரிமை வைத்திருப்பவர் மிகப்பெரிய தொகையைக் கேட்டதாகவும் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார். அவரின் முகநூல் பதிவில் “பாட்டு உரிமை பற்றிய செய்தி
...........
கோழிப் பண்ணை செல்லதுரை படத்தில் இரண்டு பாடல் ஒருவர் பாடுவார் அது ஒரு 50 நொடிகள். மற்றது ரேடியோவில் வரும் 45 நொடிகள். இடம் பெறும் 80 90களில் வெளிவந்த பாடல் அப்படி இரண்டு பாடல்கள் பயன் படுத்தினேன். இப்போது 19 லட்சம் கேட்கிறார்கள்.  உரிமை வைத்திருப்போர்.

அந்த இசையமைப்பாளருக்கு சம்பளமாக அவ்வளவு தந்து இருப்பார்களா என்பதே கேள்வி. இந்த இணையதள யுகத்தில் இது உண்மையில் ஒரு புதிய நெருக்கடி. பிறகு 1962 ஆம் ஆண்டுக்கு முந்தைய பாடலை பயன்படுத்தும் படி தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். அதன்படி கதைக்கு பொருத்துகிற மாதிரி இரண்டு பாடல்களை பயன்படுத்திக்கொண்டேன்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்