நடிகர் விஜய்க்கு அரசியல் நெருக்கடி: ‘லியோ’ விவகாரம் குறித்து சீமான்..!

புதன், 27 செப்டம்பர் 2023 (16:58 IST)
நடிகர் விஜய்க்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென அந்த இசை நிகழ்ச்சி விழா ரத்து செய்யப்பட்டது. 
இந்த நிலையில் இந்த விழா ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் தான் என நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சனம் செய்துள்ளார். 
 
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என தெரிந்தே அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீமானின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்