இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் தன் காந்தர்வக் குரலால் ஐம்பது வருட காலம் தனி சாம்ராஜ்யமே நடத்திவந்து,அனைத்து மக்களின் காதுகளையும் குளிர்வித்து, இதயத்தை இதயமாக்கிய எஸ்.பி.பி இன்று நண்பகலில் காலமானார்.
ஒருமுறை எஸ்.பி.பி, கமல்ஹாசனின் பாடும் திறத்தைப் பற்றிக் கூறும்போது, ‘’கமல்ஹாசன் உச்சஸ்ய்தாயியில் பாடும்போது, நெற்றியில் நரம்புகள் புடைந்திருக்கும்…’’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
எஸ்.பி.பியின் மறைவு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்று தெரிவித்துள்ளார்.