சிவகாசியில் அடிக்கடி பட்டாசு தொழிற்சாலை விபத்து ஏற்பட்டு வருவதும் அதில் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது தெரிந்ததே. ஆனால் இன்று கடலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர் இதில் பட்டாசு ஆலை உரிமையாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து. 9 உயிர்பலிகள், குருங்குடி கிராமத்தில். வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும், இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு