விஜய் படம் தயாரிக்கும் வாய்ப்பை மறுத்த சத்யஜோதி நிறுவனம்!

சனி, 19 ஜூன் 2021 (15:04 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சத்யஜோதி பிலிம்ஸ்.

மூன்றாம் பிறை, பகல்நிலவு உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இடையில் சில ஆண்டுகள் படம் தயாரிக்காமல் இருந்த நிலையில் அஜித்தின் விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களைத் தயாரித்து மீண்டும் பார்முக்கு வந்தனர். அதையடுத்து இப்போது தனுஷை வைத்து 4க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் தயாரிப்பில் விஜய் ஒரு படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் விஜய்யின் சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட் ஆகியவற்றைக் கணக்கு போட்டு பார்த்து நைஸாக நழுவிவிட்டார்களாம். இல்லையென்றால் விஜய்யின் அடுத்த படத்தையே இவர்கள்தான் தயாரித்திருப்பார்கள் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்