கொரோனா 3 ஆம் அலையை எதிர்க்கவும் தமிழகம் ஆயத்தம் !!

சனி, 19 ஜூன் 2021 (11:05 IST)
அரசுக்கு கொரோனா இறப்புகளை மறைக்க எந்தவித அவசியமும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு. 

 
ஆட்சியில் இருக்கும் திமுக அரசு இறப்பை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது , அரசுக்கு கொரோனா இறப்புகளை மறைக்க எந்தவித அவசியமும் இல்லை. இதனால் எந்த நன்மையும் அரசுக்கு இல்லை. இதில் தமிழக அரசு வெளிப்படையாக செய்யப்படுகிறது.  
 
மூன்றாம் அலை வரக்கூடாது என்று தான் நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த அரசு தயாராக உள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஆக்சிஜன் பற்றாக்குறை நெருக்கடி இருந்ததது. அதையும் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சரி செய்தார். மேலும் எல்லா இடத்திலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதன் காரணமாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நம்மிடம் உள்ளது.
 
3ம் அலை குழந்தைகளை தாக்கும் என்ற செய்தி வருகிறது. அதன் காரணமாக குழந்தைகளுக்கு தேவையான படுக்கை உள்ளிட்ட வசதிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் செய்து வருகிறோம், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைத்து உள்ளோம். 
 
தற்போது தமிழகத்தில் 2131 கருப்பு பூஞ்சைகள் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகவும், கருப்பு பூஞ்சைக்கான தடுப்பு மருந்துகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து ஆராயவும், மாற்று மருந்து கண்டறியவும் 13 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
10 ஆயிரம் அளவிற்கு கருப்பு பூஞ்சைக்கான தடுப்பு மருந்துகள் கையிருப்பு உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில், 4 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிடப்பட்டுள்ளது, மேலும் அங்கு  வேகமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்