ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில்

சனி, 15 செப்டம்பர் 2018 (20:10 IST)
கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் ஹீரோவாக நடித்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ் மட்டும்தன். இந்த ஆண்டு மட்டும் அவர் நடித்த 'நாச்சியார்', 'செம' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல் மற்றும் சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் ஒன்றிலும் ஜிவி பிரகாஷ் நடித்து வந்தார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'காதலை தேடி நித்யா நந்தா' என்ற டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிப்பதோடு இந்த படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். இந்த படத்தின் நாயகியாக அம்ரியா தஸ்தூர் நடிக்கவுள்ளார். மேலும் சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்