கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் இப்போது சர்தார் 2 படத்துக்கான வேலைகளை இயக்குனர் மித்ரன் தொடங்கியுள்ளதாகவும், ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது நலன் குமாரசாமி மற்றும் பிரேம் குமார் இயக்கத்தில் நடித்து வரும் படங்களை முடித்தபின்னர் இந்த படத்தில் கார்த்தி இணைவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்த படத்தின் பூஜை சென்னையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.