அட்டக்கத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் அதன் பின்னர் பீட்சா, சூதுகவ்வும் என வெரைட்டியான ஆல்பங்களைக் கொடுத்து கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களினால் ஸ்டார் இசையமைப்பாளராக மாறினார். இப்போது தமிழின் தவிர்க்க இயலாத இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.