முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை தந்தை காலமானார்!

வியாழன், 24 ஜூன் 2021 (13:02 IST)
தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளராக திகழ்ந்துக்கொண்டிருப்பவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இவர் தளபதி, ரோஜா, இருவர், துப்பாக்கி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக  பணியாற்றியிருக்கிறார். 
 
தமிழ் மட்டுமல்லாது மலையாளம் படங்களில் நிறைய பணியாற்றியிருக்கிறார். இவரது தந்தை சிவன்  (89) மூத்த திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் கேரள சினிமாவின் பிரபல புகைப்படக் கலைஞராக சிறந்து விளங்கி  இதுவரை மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
 
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். சிவனுக்கு சந்தோஷ் சிவனுடன் சேர்த்து மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். சிவனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்