நான் ரொம்ப அதிர்ஷ்டாசாலி... சிண்ட்ரல்லா கதாபாத்திரம் குறித்து ராய் லட்சுமி பெருமை!

வியாழன், 24 ஜூன் 2021 (07:31 IST)
உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா . இப்பாத்திரம்  தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட்ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. 
 
லட்சுமி ராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர்  எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வினோ வெங்கடேஷ். எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர் .
 
இந்த படத்தில் ராய் லட்சுமி துளசி எனும்  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிண்ட்ரெல்லா கதை என்றாலே ஏழை பெண்ணுக்கு பணக்கார வாழ்வு கிடைப்பதும், அதை பார்த்து பொறாமைப்படும் உறவினர்கள். மேலும்  அவளை பழிவாங்க நினைப்பதும் தான் அதன் கதை. அதில் துளசி எனும் ஏழை பெண்ணான ராய் லட்சுமி பின்னர் சிண்ட்ரெல்லாவாக மாறும் கதையாக படம் உருவாகியுள்ளது. 
 
இந்நிலையில் துளசி ரோல் புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ராய் லட்சுமி, ஒரு நடிகையாக , நான் ஏற்கனவே பல உயிர்களை வாழ்ந்திருக்கிறேன், தொடர்ந்து செய்வேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன் என கூறியுள்ளார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்