18 நாளில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்த சந்தானம் பட இயக்குனர்!

வியாழன், 19 அக்டோபர் 2023 (07:35 IST)
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து அந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து இப்போது சந்தானம் 80ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குலேபகாவலி மற்றும் மகளிர் மட்டும் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் இயக்குனர் கல்யாண் 18 நாட்களில் முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்