முடிவுக்கு வந்தது சந்தானம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு: ரிலீஸ் எப்போது?

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (18:10 IST)
முடிவுக்கு வந்தது சந்தானம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு: ரிலீஸ் எப்போது?
காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’குலுகுலு’
 
ஆடை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
சந்தானம் ஜோடியாக அதுல்யா நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் . இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் சுற்றும் வாலிபனாக சந்தானம் நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் இவ்வருட இறுதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்