நயன்தாராவை அடுத்து அட்லி-ஷாருக்கான் படத்தில் இணைந்த மேலும் ஒரு நாயகி!

செவ்வாய், 3 மே 2022 (17:17 IST)
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நயன்தாரா நாயகியாகவும் பிரியாமணி மற்றொரு முக்கிய கேரக்டரிலும் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நாயகி இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கிங்’ என்று டைட்டில் வைத்து இருப்பதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாராவும் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் பிரியாமணியும் நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை சானியா மல்ஹோத்ரா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே அமீர்கான் நடித்த ’டங்கல்’ படத்தில் அமீர்கானின் இரண்டாவது மகளாக நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்