சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் -அட்லீ படம் கைவிட்டப்பட்டது !

வெள்ளி, 25 மார்ச் 2022 (18:50 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கி வந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அட்லி மும்பையில் தொடங்கியுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் ஷாருக் கான் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

 இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம்  கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், ஷாருக்கான் மகன் போதைப்பொருள் விவகாரத்தில் கைதானது மற்றும் இப்படத்தின் கதை விவாதத்திற்கு பல கோடி செலவானது  இப்படத்தைக் கைவிடக் காரணம் என தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்