அக்டோபர் மாதம் சமந்தா – நாக சைதன்யா திருமணம் நடப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால், கைநிறைய படங்களை வைத்திருக்கும் சமந்தா, மற்றவர்களை காக்க வைக்கக்கூடாது என்பதால், திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் அவசர அவசரமாக முடித்துக் கொடுத்து வருகிறார். காரணம், திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்பதுதான்.