கடினமான ஆறு மாதங்கள் முடிவுக்கு வந்துவிட்டன… சமந்தாவின் லேட்டஸ்ட் பதிவு!

செவ்வாய், 11 ஜூலை 2023 (07:37 IST)
இப்போது சமந்தா பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

இந்த இரு பிராஜக்ட்களை முடித்துவிட்டு  அவர், ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் தசை அழல்சுழற்சி நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போதுதான் குணமாகி படங்களில் நடித்துவந்தார்.

இந்நிலையில் இப்போது சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய செல்ஃபி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் “ நீளமான கடினமான ஆறு மாதங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவர் உடல்நல பாதிப்பில் இருந்து முழுவதும் குணமாகிவிட்டார் என்று பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்