இப்போதைக்கு சமந்தா இல்லையாம்…

வியாழன், 15 ஜூன் 2017 (18:07 IST)
சிவகார்த்திகேயன் படத்தில், இப்போதைக்கு சமந்தா நடிக்கவில்லை என்கிறார்கள்.




‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். காமெடியனாக சூரி நடிக்கிறார். 24 ஏஎம் ஸ்டுடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நாளை தென்காசியில் தொடங்குகிறது. 30 நாட்களுக்கு அங்கு முதல் ஷெட்யூலைப் போட்டுள்ளார் பொன்ராம். முதலில் சிவகார்த்திகேயன் – சூரி சம்பந்தப்பட்டக் காட்சிகளைப் படமாக்குகின்றனர். தற்போது, விஜய் ஜோடியாக அட்லீ இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, அந்தப் படம் முடிந்த பிறகுதான் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்