சமந்தாவை மாற்றிய லாக்டவுன்.. கார்டன் விரும்பிகளுக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்

வெள்ளி, 12 ஜூன் 2020 (09:35 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது நடிகை சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை அவர் வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரு தட்டு, கோகோபீட், விதைகள் மற்றும் குளிர்ச்சியான அறை மட்டும் கொண்டு சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வதறகான சூப்பர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My first harvest of cabbage microgreens

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்