சமந்தா - நாக சைதன்யா ஜோடி: நிச்சய தேதி அறிவிப்பு!!
திங்கள், 26 டிசம்பர் 2016 (16:35 IST)
நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும்- சமந்தாவும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய திருமணத்துக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர்.
நாகார்ஜுனாவின் இளையமகன் அகில் காதலித்த ஸ்ரேயா பூபல் என்ற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.
நாக சைதன்யா- சமந்தா இருவரும் புதிய படங்களில் நடித்து வருகிறார்கள். எனவே எப்போது திருமணம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
தற்போது இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற ஜனவரி மாதம் 29-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.