இந்நிலையில் படம் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் நடிகை சமந்தா மீது நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதுநாள் வரை விமர்சனங்களை பொருட்படுத்தாமல் இருந்து வந்த சமந்தா இப்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
ஒரு கதாநாயகன் தொடர்ந்து 3 தோல்வி படங்கள் கொடுத்தாலும், அவரது படங்கள் வரும்போது ரசிகர்கள் தியேட்டர்களில் சென்று பார்க்கிறார்கள். ஆனால் கதாநாயகியை குறை சொல்கிறார்கள். கதாநாயகனுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு சம்பளம் கொடுப்பது இல்லை. ஆனால் நாங்களும் நடிகர்களைப் போல கடுமையாக உழைக்கத்தான் செய்கிறோம் என பதிலடி கொடுத்துள்ளார்.