விஜய் சேதுபதியை தன் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

புதன், 9 ஆகஸ்ட் 2023 (11:10 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் இந்த படம் விஜய் சேதுபதியின் இரண்டாவது படமாக ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே அவர் நடித்த மும்பைகார் திரைப்படம் ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது. விரைவில் அவரின் இன்னொரு படமான மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் ஜவான் படத்தில் ஷாருக் கானோடு நடித்துள்ள விஜய் சேதுபதியை தன்னுடைய படத்தில் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என மற்றொரு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் விரும்பி விஜய் சேதுபதியை அனுகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்