பிரபாஸ் vs சைஃப் அலிகான்: காலையிலேயே வந்த ஆதிபுருஷ் அப்டேட்!!

வியாழன், 3 செப்டம்பர் 2020 (08:06 IST)
பிரபாஸ் நடிக்கும் படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ். இத்திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகிறது. மேலும், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.  
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021 தொடங்கி 2022 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீமையை வெற்றி கொள்ளும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தை (ராமாயணம்) அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. 
 
இந்நிலையிலில் படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படத்தின் இயக்குனரே தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டரோடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

சைஃப் அலிகான் இந்த படத்தின் வில்லனாக இருப்பார். மேலும் இவர் லங்கேஷ் எனும் கதாபாத்திர பெயரில் நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்