பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவி ஒரே படத்தில் உலக பேமஸ் ஆனார். அதன் பிறகு தமிழில் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இன்னமும் பிரேமம் மலர் டீச்சராகவே அவரை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவரும் கூட. இந்நிலையில் அவர் முதன் முதலாக தனது திருமணம் பற்றி பேசியுள்ளார்.