துண்டு துக்கடா வேடம் போய், சிங்கிள் டான்சுக்கு ஆடுகிற வாய்ப்பும் இல்லாமல் இருந்தார், சதா. இந்நிலையில் வடிவேலு நடிக்கும் எலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். யானைக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு ஜோடியாவது மேல் அல்லவா?
எலி படத்தின் கதையும், அவரது கதாபாத்திரமும் பிடித்ததால்தான் சதா நடிக்க ஒப்புக் கொண்டாராம். கதை கேட்டு நடிக்கிற நிலையிலா இருக்கிறார் சதா? போகட்டும், படத்தில் அவரது வேடம் என்ன?