சச்சினின் குழந்தைப் பருவம் முதல் தற்போது வரையிலான வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, ‘சச்சின் : எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் எர்ஸ்கின், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை மட்டுமின்றி, குடும்ப வாழ்க்கை குறித்தும் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது.
சச்சின் தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்க, ஷேவாக், தோனி உள்ளிட்ட சில கிரிக்கெட் பிரபலங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மே மாதம் 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவருடைய இசை உலகத்தரத்துக்கு ஏற்ப இருந்ததாகப் பாராட்டியுள்ளார் சச்சின். தமிழிலும் இந்தப் படம் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.