இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுத்துள்ளனர். இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று டுவிட்டரில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சச்சினுக்கு வாழ்த்து கூறியிருந்தார். ரஜினியின் வாழ்த்தால் உற்சாகமடைந்து பதில் டுவீட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் 'நன்றி தலைவா' என்று குறிப்பிட்டுள்ளார்.