மருதாணி வைப்பது, ஆலிவ் எண்ணெய்யை தேய்த்தல் போன்றவற்றை செய்து வந்தால் நகங்கள் எளிதில் உடைந்து போகாமல் இருக்கும். தினந்தோறும் தேவையான அளவு, தண்ணீர், பழரசங்கள் போன்றவற்றை அருந்துவதும் நகத்திற்கு வலிமை தரும்.
ஊட்டச்சத்து குறைபட்டாலும் கூட நகவளர்ச்சி குறைபடலாம். இதற்கு புரோட்டீன் அதிகமுள்ள உணவுகள், வைட்டமின் ஏ, கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதனால் நல்ல பலன் ஏற்படும். கூடவே உடல் ஆரோக்கியமும் மேம்படும்.