தனது முதலாவது படத்திலேயே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து இவர் இயக்கிய “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது வட இந்தியாவில் பெண் ஒருவர் மதம் மாறி திருமணம் செய்துகொண்டது தொடர்பாக ஒரு டிவீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக மோகன் ஜி திரௌபதி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் எனக் கூற , ரசிகர்கள் அந்த டிவீட்டை பயங்கரமாக கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.