அண்ணா.. விருது குடுண்ணா.. – ஆஸ்கருக்கு போன ஆர்.ஆர்.ஆர்!

வியாழன், 6 அக்டோபர் 2022 (13:57 IST)
ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான படங்களுக்கான பிரத்யேக போட்டியில் பங்கெடுத்துள்ளது.

தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது இந்த படம்.

இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்திய அரசின் சார்பில் ”செல்லோ ஷோ (Chhello Show)” என்ற குஜராத்தி படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.



ஆனாலும் சோர்வடையாத ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தை வேறுவிதத்தில் ஆஸ்கர் ரேஸில் நுழைத்துள்ளார். ”For your Consideration” என்ற சிறப்பு பிரிவின் மூலமாக ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பித்துள்ளது ஆர்.ஆர்.ஆர்.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த துணை நடிகர், நடிகை, சிறந்த பாடல் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் விண்ணப்பித்துள்ளது ஆர்.ஆர்.ஆர். இந்த போட்டியில் ஆர்.ஆர்.ஆர் ஆஸ்கர் விருதை பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edited By: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்